Sunday, September 28, 2014

பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய திருவானைக்காவல்

பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய திருவானைக்காவல்

திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மிகப்பெரிய சிவன் கோயில் திருவானைக்காவல் திருக்கோயிலாகும். பஞ்ச பூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியதாக இத்தலம் விளங்குகிறது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர் உள்ளிட்டோரால் இத்தலம் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள மூலவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடனும் விளங்குகின்றனர்.இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது.இந்த தலத்தை பற்றி புராணக் கதை கூறுவது என்னவென்றால், சிவபெருமான் பக்தர்களான புஷ்பதண்தா மற்றும் மல்யவா என்ற இருவர் சாபம் காரணமாக வெள்ளை யானையாகவும் சிலந்தியாகவும் இந்த காட்டில் பிறந்தனர். யானை சந்திரதீர்த்த குளத்திலிருந்து சிவபெருமானுக்கு நீரும் மலரும் கொண்டுவந்து பூஜை செய்தது. சிலந்தியோ சிவலிங்கத்தின் மீது மர இலைகள் விழாமல் இருக்க, வலை பின்னியது. பூஜைக்கு வந்த யானை சிலந்தி வலையை அசிங்கமாகக் கருதி வலையை துடைத்தெறிந்தது. இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு சண்டையில் இரண்டுமே மாய்ந்தன. சிவபெருமான் இருவருக்குமே மோட்சம் அளித்தார். பிற்காலத்தில் சிலந்தி சோழ மன்னர்கள் குடும்பத்தில், கோச்செங்கட்டனாக பிறந்தது. இந்த மன்னர் பிற்காலத்தில் சிவபெருமானுக்கு சுமார் எழுபது கோவில்கள் கட்டிய பெருமை கொண்டவர்.திருவானைக்காவல் கோவிலும் மிக பிரம்மாண்டமாக இந்த மன்னராலேயே கட்டப்பட்டது. அவரது பூர்வ ஜென்ம நினைவுகள் காரணமாக இந்த திருக்கோவிலில் யானைகள் நுழையாதபடி வடிவமைத்துள்ளார். கோவிலுக்குள் யானை வந்தாலும் சிவபெருமான் சன்னதி அருகே வரமுடியாதபடி கருவறை அமைந்துள்ளது.திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் கருவறைக்குள் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.உள் பிரகாரத்தில் வாயிலில் இருந்து பார்த்தால் கருவறை தெரியாது. கருவறை வாயில் அமைந்திருக்க வேண்டிய இடத்தில் 9 துளைகளைக் கொண்ட ஜன்னல் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது. இது மட்டும் அல்லாமல், மிகவும் குறுகிய வாயில் ஒன்றும் அமைந்துள்ளது. அதற்குள் 4 அல்லது 5 பேர் மட்டுமே சென்று சுவாமியை தரிசிக்க இயலும்.

ஓம் நமசிவாய
சிவன் தொண்டு தொடரும்

கூரிய கத்தி - விரைவான வெட்டுக்கள் - ஆச்சரியப்படுத்தும் ஆற்றல்


Sunday, September 21, 2014

பொடி

பொடி
அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நாவல் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பொடி :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாழை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்